வெளிநாட்டு தொழில் வாய்ப்பு விடயத்தில் காலங்கடந்த சட்டங்களை நீக்கிஇ புதிய சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ரியாதிலுள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைக் தெரிவித்தார். சவுதியில் தொழில் புரியும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்காக மேற்கொண்ட விஜயத்தின் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பினால் வழங்கப்படும் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா கற்கை நெறிகளை சவுதி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்பவர்களின் பாதுகாப்பு முக்கியமாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு உரிய தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதகாவும் அமைச்சர் கூறினார்
நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி நிலைக்கு அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் பொறுப்பு கூற வேண்டும் . தற்போதைய சூழ்நிலையில் குறுகிய அரசியல் நோக்கங்களில் செயற்படுமிடத்து, நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.. .