Ads Area

சவுதியின் பிரபல உணவகமான அல்பைக் உத்தியோக பூர்வமாக கத்தாரில் .!

 சவுதியின் பிரபல உணவகமான அல்பைக் உத்தியோக பூர்வமாக கத்தாரில் இன்று நவம்பம் மாதம் 11ம் திகதி  திறக்கப்பட்டுள்ளது.


மேற்படி அல்லைக் உணவகமானது கத்தாரில் Messila மெட்ரோ நிலையத்திற்கு அருகாமையில் விசாலமான இடத்தில் அமையப்பெற்றுள்ளது. முதல் தினமான இன்று அதிகளமான மக்கள் குழுமியிருந்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் இறுதிப் பகுதியில் கத்தாரில் தனது புதிய கிளைகளைத் திறப்பது தொடர்பாக சவுதியின் அல்பைக் நிறுவனம் உத்தியோக பூர்வமாக அறிவித்தது. அந்த அறிவிப்பில் கிளைகள் 2022ம் ஆண்டு கால்ப்பந்து உலகக் கோப்பை ஆரம்பிக்க முன்னர் திறக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

அல்பைக் என்பது சவுதியைப் பொறுத்தவரையில் KFCஇணையான, அதிகளவு வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்ட உணவகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe