உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேக நபராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சட்டமா அதிபரின் ஆலேசானைக்கமைய அந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நேற்றுமுன்தினம் (01) உத்தரவு பிறப்பித்தார்.
உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக குற்ற விசாரணை திணைக்களத்தினால் ரிஷாட் பதியுதீன் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பிலான நீதவான் விசாரணை மீண்டும் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.