Ads Area

ஆணுறைகளுக்குள் வைத்து ஐஸ் மற்றும் ஹெரோய்ன் விற்றபனை..!

 ஆணுறைகளுக்குள் வைத்து ஐஸ் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருள்களை விற்ற பிரதான வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா, தலவாக்கலை ஆகிய பிரதேசங்களில் ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருள்களை விற்ற பிரதான வர்த்தகர், சனிக்கிழமை (19) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பலப்பட்டிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயாதான சந்தேகநபர், பொதுப் போக்குவரத்து பஸ்களில் பயணித்து, இவ்வாறு போதைப்பொருட்களை விற்பனைச் செய்வதாக கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளார்.


அவரை சோதனைக்கு உட்படுத்தியதில், ஆண்ணுறைகளுக்குள் போதைப்பொருள்களை மறைத்துவைத்து எடுத்துவந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு எடுத்து வரும் போதைப் பொருட்களை நகரத்துக்கு அண்மையிலுள்ள குறுக்கு வீதிகளில் மறைத்துவைத்து, விற்பனைச் செய்கின்றார் என்பதும் தெரிந்துள்ளது.


சந்தேகநபரை கைது செய்யும் போது அவரிடம் 280 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் 610 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று அதிரடிப்படையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe