நூறுஸ்ஸலாம் அஹதிய்யா பாடசாலையும், சம்மாந்துறை அஹதிய்யா பாடசாலைகள் கூட்டிணையமும் இணைந்து நடாத்திய சேவை நலன் கௌரவிப்பு விழா கடந்த 2022.11.19 அன்று ஜம்மியா மண்டபத்தில் ஆசிரிய ஆலோசகர் Z.M.றிஸ்வி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் முதன்மைப் பிரதித்தலைவருமான கெளரவ M.I.M.மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வில் பல அதிதிகள் கலந்துகொண்டதுடன் முக்கிய சில அதிதிகளுக்கான கெளரவிப்பும், ஆசிரியர்களுக்கான சீருடை விநியோகமும் இடம்பெற்றது.