Ads Area

குறைந்த வருமானம் பெறுவோருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு?

 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை, குறைக்கவோ அல்லது இரத்து செய்யவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் எஸ். இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


குறித்த பிரதேசங்களில் இதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.


தற்போதைய பொருளாதார நெருக்க்கு மத்தியிலும், இந்த கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.


அத்துடன், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கு, இந்த கொடுப்பனவுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


(அரசாங்க தகவல் திணைக்களம்)



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe