ஆசிய மன்ற நிலையத்தின் அனுசரணையில் கப்சோ நிறுவனத்தின் முன்னெடுப்பில் சமூக ஒருமைப்பாட்டினை வலுப்படுத்தல் (SCOR) வேலைத்திட்டத்தினூடாக 2022.10.28 இன்று சம்மாந்துறை அல் மதீனா பாடசாலையில் ஒரு தொகை பயிர் கன்றுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இலங்கையில் பொருளாதார மேம்பாடு மற்றும் வீட்டுத்தோட்ட மேம்படுத்தல் சார் நோக்கிலும் கப்சோ நிறுவனத்தின் சமூக ஒருமைப்பாட்டு வேலைத்திட்ட இளைஞர் அணியினர் இந் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந் நிகழ்வில் கப்சோ நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திரு. ஏ.ஜே காமில் இம்டாட் மற்றும் மதத்தலைவர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடாலை அத்திபர், அலுவலர்கள், இளைஞர் தொண்டர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.