Ads Area

அமீரகம் முழுவதும் பல்வேறு சலுகைகளை வழங்கும் “My Emirates Pass”..!

 துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது பிரபலமான மை எமிரேட்ஸ் பாஸை பயணிகளுக்கு திரும்ப வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 500 க்கும் மேற்பட்ட இடங்களில் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக சலுகைகளை இந்த My Emirates Winter Pass வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த காலங்களில் துபாய்க்கு அல்லது துபாய் வழியாக எமிரேட்ஸில் பயணிக்கும் பயணிகள் எமிரேட்ஸ் போர்டிங் பாஸின் மூலம் துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தள்ளுபடிகளைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நூற்றுக்கணக்கான ரீடெயில், சாப்பாட்டு விற்பனை நிலையங்கள், அத்துடன் பிரபலமான இடங்கள் மற்றும் சொகுசு ஸ்பாக்களுக்கு தங்களின் போர்டிங் பாஸ் மற்றும் தங்களின் செல்லுபடியாகும் அடையாள ஆவணத்தை காட்டி சலுகைகளைப் பெறலாம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த My Emirates Pass சலுகைகளின் முழுப் பட்டியலுக்கு, வாடிக்கையாளர்கள் https://www.emirates.com/ae/english/experience/my-emirates-pass/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என விமான நிறுவனம் கூறியுள்ளது.

கூடுதலாக, எமிரேட்ஸ் பயணிகள் டூர் துபாயின் (Tour Dubai) ஒரு மணிநேர க்ரீக் சைட்ஸீயிங் குரூஸுக்கு (Creek sightseeing Cruise) ஒரு காம்ப்ளிமெண்ட்ரி டிக்கெட்டைப் பெற்று பாரம்பரிய தோவ் படகில் (dhow boat) இருந்து கண்கவர் காட்சிகளை காணலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

thanks for website-khaleejtamil




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe