Ads Area

சம்மாந்துறை சந்தக்கவி அச்சிமுகம்மட் கரிகால் சோழன் விருது பெற தமிழ்நாடு தஞ்சை பயணம்.

 சம்மாந்துறை சந்தக்கவி அச்சிமுகம்மட் கரிகால் சோழன் விருது பெற தமிழ்நாடு தஞ்சை பயணம்.


சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை மற்றும் தஞ்சைத் தமிழ்பல்கலைக்கழகம் இணைந்து,மலேசியா ,சிங்கப்பூர் ,இலங்கை  எழுத்தாளர்களின் மிகச்சிறந்த நூல்களை ஆராய்ந்து ஆண்டுதோறும் வழங்கும் கரிகால் சோழன் விருது விழாவுக்கு இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட ‘எனது நிலமும் நிலவும் ‘ எனும் மரபுக் கவிதைத் தொகுதி கரிகால் சோழன் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.


நூலாசிரியரான மரபுக் கவிஞர் சம்மாந்துறை சந்தக்கவி அச்சி முகம்மட்  அவர்களை தஞ்சாவூர் பல்கலைக்கழகம் கௌரவமாக அழைத்திருக்கிறது. விழா நிகழ்வு 2022.11.28 ஆம் திகதி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெற இருக்கிறது.எமது நாட்டுக்குப் பெருமையைச் சேர்த்த கவிஞர் அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறோம்.


(சம்மாந்துறை : றிகாஸ்)



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe