Ads Area

அம்பாறை இறக்காமம் பிரதீபா கலை மன்றத்தின் வருடாந்த கலை நிகழ்வும் கலைஞர்கள் கௌரவிப்பும் !

 நூருல் ஹுதா உமர்


மூவின மக்களையும் உள்ளடக்கிய இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் நியுகுன பிரதேசத்தில் இயங்கிவரும் பிரதீபா கலை மன்றத்தின் வருடாந்த கலை நிகழ்வும் மாகாண கலாசார திணைக்களத்தின் அனுசரணையில் பிரதேச மட்ட கலை இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டிய கலைஞர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நியுகுன புராணஸ்தான விகாரை ஆராதணை மண்டபத்தில் பிரதீபா கலை மன்றத்தின் தலைவியும் பயிற்சி ஆசிரியருமான ரேனுகாவின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில், இறக்காமம் பிரதேச உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.  மேலும், நியுகுன புராணஸ்தான ரஜமஹா விகாராதிபதி சுகதரட்ன ஹிமி, ஹிங்குராண விஹாராதிபதி சிறி தம்மா ஹிமி, அம்பாரை மண்டல மஹா விஹாராதிபதி சுஹதகம சீலரட்ன ஹிமி ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு இறக்காமம் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் (கிராம நிலதாரி) எச்.பி. யசரட்ன பண்டார, மாகாண கலாசார உத்தியோகத்தர் டப்லியூ.டி. வசந்தா மத்திய கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். நௌபீஸா, முஸ்லிம் சமய கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ. இப்ராலெப்பை,  கலாசார அதிகார சபை சார்பாக உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப், கிராம உத்தியோகத்தர் ஏ.எல். ஹுஸைன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ. பஸீர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் இனோகா யசுந்தர, பயிற்சி ஆசிரியர் அஹில பிரகாஷ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

பிரதேச செயலக கலாசார பிரிவின் அனுசரைணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதீபா கலைமன்ற மாணவர்களின் பல்வேறு கலையம்சங்கள் அரங்கேற்றப்பட்டன. சிங்கள பாரம்பரியமான  கண்டிய நடனங்கள், மேற்கத்தேய மற்றும் கிராமிய நடன நாட்டிய நிகழ்வுகளுடன் நாடகங்கள், பாடல்கள் மற்றும் பல்சமூகங்களை பிரதிபலிக்கும் நடன நிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் மாகாண கலாசார திணைக்களத்தின் அனுசரணையில் இடம்பெற்ற பிரதேச மட்ட கலை இலக்கிய பல்வேறு இலக்கிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

Photo Albums

1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5
1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5
5 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe