Ads Area

நேர்மறையாக சிந்திக்கும் இளைஞர்கள்; வளவாளராக கலந்துகொண்ட முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா..!

 ( எம்.என்.எம்.அப்ராஸ்)


ஐ.ஆர்.ஓ.ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில்,றிஸ்லி முஸ்தபா எடியுகேஸன் எயிட் இன் ஒத்துழைப்புடன் "நேர்மறையாக சிந்திக்கும் இளைஞர்கள்"எனும் தலைப்பிலான அம்பாறை மாவட்டத்தில் இளைஞர்கள் பங்கு பற்றிய பயிற்சி பட்டறை காரைதீவு தனியார் மண்டபத்தில் ஐ.ஆர்.ஓ ஸ்ரீலங்கா அமைப்பின் நிர்வாக இயக்குனர் எ.றொஸான் முஹம்மட் அவர்களின் தலைமையில் இன்று(28)இடம்பெற்றது.

ஐ.ஆர்.ஓ.ஸ்ரீலங்கா அமைப்பின் நிறைவேற்று சபை உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் பயிற்சி பட்டறையின் வளவாளராக முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் எம்.எம்.முஸ்தபா (மயோன் முஸ்தபா) அவர்கள் கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினார்.

இதன் போது முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் எம்.எம்.முஸ்தபா(மயோன் முஸ்தபா) உரையாற்றுகையில்,

இளைஞர்களுக்கு வழிகாட்டல் மிக அவசியானதாகும். இளைஞர்கள் சமூகத்திற்குள் நேர்மறையாக சிந்திப்பதால் எவ்வாறான நன்மைகள் கிடைக்கின்றன?நேர்மறையான சிந்தனைமிக்க இளைஞர்களின் வெற்றிகரமான எதிர்கால வாழ்க்கை என்ன? மற்றும் 
உயர் கல்வியில் பல துறைகள் காணப்படுகின்றது இளைஞர்கள் தமக்கு விருப்பமான கல்வி துறையை தெரிவு செய்வதுடன்,தொழில் துறையில் முன்னேற வேண்டும் இதற்கான உரிய வழிகாட்டல் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

தொழில்துறையை முறையாக தெரிவு செய்வதன் மூலம் தொழில்துறை மேம்படும் இதனால் நாமும், நமது குடும்பமும், நாடும் முன்னேறும்,நமது அம்பாரை மாவட்டத்தில் மீன்பிடி,விவசாயம் பிரதான வளமாக உள்ளது இதில் அதிகமாக பல தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்றது இதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் அத்துடன் நம்பிக்கையுடன் இளைஞர்கள் செயற்பட வேண்டும் என்றார்.

மேலும் இளைஞர்களுக்கு வழிகாட்டல் செயற்திட்டத்தின் பல செயலமர்வுகளை ஐ.ஆர்.ஓ.ஸ்ரீலங்கா அமைப்பு அம்பாறை மாவட்டத்தில் நடாத்தியுள்ளதாகவும்,எதிர்காலத்தில் இவ்வாறான பயிற்சி பட்டறைகள் ஏனைய மாவட்டங்களிலும் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஐ.ஆர்.ஓ.ஸ்ரீலங்கா அமைப்பின் நிர்வாக இயக்குனர் எ.றொஸான் முஹம்மட் தெரிவித்தார்.

மேலும் றிஸ்லி முஸ்தபா எடியுகேஸன் எயிட் அமைப்பு இவ் நிகழ்வின் பங்குதாரர் அமைப்பாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Photo Albums

1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe