கடந்த வார இறுதியில் தாய்வானைச் சூழ, சீனாவின் 71 போர் விமானங்கள் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டதாக தாய்வான் இன்று தெரிவித்துள்ளது.
அவற்றில் தாக்குல் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தாய்வான் கூறியுள்ளது.
இதேவேளை, அமெரிக்காவும், தாய்வானும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பதிலடியாக தாக்குதல் பயிற்சியொன்றை ஞாயிற்றுக்கிழமை தான் நடத்தியதாக சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்துக்குள் 47 தடவைகள் சீன விமானங்கள் ஊடுருவியதாகவும் தாய்வான் தெரிவித்துள்ளது.
மேலும் தன்னை ஒரு சுயாதீன ஜனநாயக நாடாக தாய்வான் கருதுகிறதாக தெரிவித்த சீனா ஆனால் தனது ஒரு பிராந்தியம் எனவும் சீனா கூறி வருகிறது.