BBC
ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பித்து 100 நாட்களாகிவிட்டதுஇ 1979 ம் ஆண்டின் இஸ்லாமிய புரட்சியின் பின்னர் அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ள ஆர்ப்பாட்டம் இது.
ஆனால் மக்கள் இதற்காக பெரும் விலையை செலுத்தநேர்ந்துள்ளது.
69 சிறுவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது - மேலும் 26 ஆர்ப்பாட்டக்காரர்கள் மரண தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சர்வதேச மன்னிப்புச்சபை இவற்றை போலியான விசாரணைகள் என்கின்றது.
ஈரானில் கடந்த காலங்களில் தேசிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் - 2017 முதல் 2018 வரை- பின்னர்நவம்பர் 2019 இந்த ஆர்ப்பாட்டம் தனித்துவமானது.சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்இ பெண்கள் வாழ்க்கை சுதந்திரம் என்ற தலைப்பில் பெண்கள் இதற்கு தலைமை தாங்குகின்றனர்.
ஈரானின் சில பிரபலங்கள் இந்த ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்துள்ளனர் இதன் காரணமாக அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்இ அல்லது வெளிநாடுகளில் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஈரானின் நன்கறியப்பட்ட நடிகை இளம் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரின் கொலையை கண்டித்ததை தொடர்ந்து அவரை கைதுசெய்த அதிகாரிகள் ஈரானின் மிகவும் பயங்கரமான எவின் சிறையில் அடைத்துள்ளனர். அவர் ஈரானில் கட்டாயமாக அணியவேண்டிய தலையை மூடியணியும் ஆடையின்றி ஆர்ப்பாட்ட்க்காரகளின் சுலோகங்களுடன் தான் காணப்படும் படத்தை வெளியிட்டிருந்தார்.
நான் டாரானேயுடன் நான்கு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன்இதற்போது தனது சக மக்களிற்கு ஆதரவளித்த உரிய செயலிற்காக அவர் சிறையில் உள்ளார்இ- ஈரானில் வழங்கப்படும் நீதியற்ற தண்டனைகளிற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என ஒஸ்கார் வென்ற த சேல்ஸ்மன் படத்தை இயக்கிய அஸ்கார் பர்காடி இன்ஸடகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவளிப்பது குற்றம் என்றால் இந்த நாட்டின் மில்லியன் கணக்கான மக்களும் குற்றவாளிகள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் மிகவும் பிரபலமான கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர் அலி கரிமி - துபாயில் தற்போது தங்கியுள்ள அவர் ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவளித்துள்ளார். தன்னை கொலை செய்யப்போவதாக ஈரானிய புலனாய்வாளர்கள் எச்சரித்தனர் என தெரிவித்துள்ள அவர் இதனை தொடர்ந்து தற்போது தான் அமெரிக்கா சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் தற்போது ஈரான் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பவராக மாறியுள்ளார்.இன்ஸ்;டகிராமில் அவரை 14 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். ஈரானின் மற்றுமொரு கால்பந்தாட்ட வீரரான ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த பின்னர் ஈரானின் நீதித்துறை தனது நகை கடையையும் உணவகத்தையும் மூடி விட்டது என குறிப்பிட்டுள்ளார்.