சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L. முகம்மது ஹனீபா அவர்களின் வழிகாட்டுதலுக்கமைவாக கிராம சேவகர்கள் நலன்புரி அமைப்பின் தலைவர் A.R.M.அஷாட் G.N அவர்களின் தலமையிலான குழுவின் முயற்சியினாலும் சம்மாந்துறை பிரதேச சபையின் நிதி அனுசரணையுடனும் சம்மாந்துறை பிரதேசத்தில் வசிக்கும்குடும்பங்களின் தகவல்களை ஒழுங்கு முறையில் திரட்டும் நோக்கில் உருவாக்கப்பட்ட குடும்ப விபரத்திரட்டு புத்தகம் கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச கிராம சேவையாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் A.R.M.அஷாட் G.N அவர்களின் தலமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (05) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் S.L. முகம்மது ஹனீபா, பிரதேச சபை தவிசாளர் கௌரவ A.M.M.நௌஷாட் மற்றும் உதவி பிரதேச செயலாளர் UM. அஸ்லம், கணக்காளர் I.M.பாரிஸ், கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர் ML.தாசிம், கிராம சேவை உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இக் குடும்ப விபரத்திரட்டு புத்தகம் முதன் முதலாக சம்மாந்துறைப் பிரதேச செயலகமே அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எதிர்காலத்தில் கணனிமயப்படுத்தி தரவுத்தளம் ஒன்றை உருவாக்கி மக்களுக்கு துரித சேவையை வழங்குவது இதன் எதிர்பார்ப்பாகக் காணப்படுகிறது.
thanks-newsplus