சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நாளாந்தம் வரும் நோயாளர்களுக்கு மாத்திரை வழங்குவதற்காக சம்மாந்துறை பிரதேச சபையினால் மூன்றாம் கட்டமாக ஒரு லட்சம் மாத்திரை பக்கெட்கள் வைத்திய அத்தியட்சகரிடம் வெள்ளிக்கிழமை (02)அன்பளிப்பு செய்யப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் பணிப்புரைக்கமைவாக சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.சரீபா, ஆகியோர்களினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆசாத்.எம்.ஹனீபாவிடம் மாத்திரைப் பக்கெட்கள் கையளிக்கப்பட்டது.
இதில் டாக்டர் நியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இத்திட்டமானது சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்கள் வைத்தியசாலை சென்றபோது வைத்தியசாலைக்கு நாளாந்தம் மருந்து எடுக்கவருகின்ற நோயாளிகளுக்கு கடதாசியில் மருந்து வழங்கப்படுவதை அவதானித்த தவிசாளரினால் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மருந்துப் பக்கெட்களை பிரதேச சபையின் நிதியில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல் மையம்
சம்மாந்துறை பிரதேச சபை
0672030800