சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களிடம் பொறியியலாளர் யு.மசாஹிர் அவர்கள் சார்பாக அவருடைய மைத்துனரும், சம்மாந்துறை பிரதேச சபையின் ஜனாதிபதி விளையாட்டுத் கட்டிடத் தொகுதி பொறுப்பாளர் ஏ.ஏ.சலாம் அவர்களினால் புத்தங்கள் கையளிக்கப்பட்டது. இதன்போது சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களும் கலந்துகொண்டார்.
கல்விச் சமூகம் பயன்பெறும் நோக்கில் பொறியியலாளர் யு.மசாஹிர் அவர்களினால் 88 ஆங்கில சிறுகதை மற்றும் தொடர்கதை புத்தகங்கள் அமீர் அலி பொது நூலகத்திற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.