Ads Area

ஹெம்மாத்தகம அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவன் ஸையாப் ஷியாம் பாராட்டி கெளரவிப்பு.

 அஸ்ஹர் இப்றாஹிம்


ஹெம்மாதகம வரலாற்றின் சாதனை வரிசையில் 12 வயதை தொடும் மாணவன் ஸையாப் சியாம் தேசிய ரீதியிலான 100 மீற்றர் மற்றும்  80 மீற்றர்  போட்டிகளில் முதலாமிடம் பெற்று,  சாதனை படைத்ததை பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்திருந்த மாபெரும் வாகனப் பேரணியும் பாராட்டு நிகழ்வும் அண்மையில்  இடம்பெற்றது. 

அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை,  பள்ளிபோருவ முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய  மாணவர்களின் சங்கங்கள் (OBA), பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் , ஹெம்மாத்தகம இளைஞர் அமைப்புக்கள், எமிரேட்ஸ் விளையாட்டுக் கழகம் என்பன இணைந்து நடாத்திய வாகனப் பேரணியையும் , பாராட்டு நிகழ்வினையும் ஏற்பாடு செய்திருந்தன.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe