Ads Area

நோர்வூட் தேசிய பாடசாலை மாணவனின் சாதனை.

 அஸ்ஹர் இப்றாஹிம்


அட்டன் கல்வி வலயம் நோர்வூட் தேசிய பாடசாலையில் பொறியியல் தொழில்நுட்ப பிரிவு மாணவன் எஸ்.கிரிஸான்    தொழில்நுட்பவியல் பீடத்திற்கான பச்சை இல்லத்தில் தாவரத்தின் வளர்ச்சியை கண்காணிக்கவும் பச்சை இல்லத்தில் உள்ள ஈரப்பதன் வெப்பநிலை ஆகியவற்றினை தன்னியக்கமாக கண்காணித்து இல்லத்திற்கான அனைத்து பரிமானங்களையும் தன்னியக்கமாக கட்டுப்படுத்தக்கூடிய IOT முறைமையினாலான செய்நிரல் ஒன்று உருவாக்கப்பட்டு இணையத்தின் ஊடாக கட்டுப்படுத்தக் கூடிய வசதிகளுடன் கூடிய முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டு பச்சை இல்லத்தில் 
(Green House) பொருத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறாக பச்சை இல்லத்தினை இணையத்தின் வழியாக கண்காணிக்கவும் தன்னியக்கமாக கட்டுப்படுத்த கூடியதுமான முறைமை உருவாக்கப்பட்டுள்ளது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe