Ads Area

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கும் 04 வைத்தியசாலைகளுக்கும் பாராட்டு !

 நூருள் ஹுதா உமர்


உலக வங்கியினால் அமுல்படுத்தப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP செயற்திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்காக 04 பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளுக்கும், இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சாய்ந்தமருது, காரைதீவு, அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று ஆகிய வைத்தியசாலைகளுக்குமான பாராட்டு நிகழ்வு மட்டக்களப்பு மாகாண சுகாதார பயிற்சி பயிற்சி பிரிவில் நடைபெற்றது 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்  ஜெஸ்டினா முரளிதரன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மெலிண்டன் கொஸ்தா மற்றும் பிரிவுத்தலைவர்களின்  பங்குபற்றுதலோடு  நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் தலைமையிலான குழுவினருக்கு விருதும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வைத்தியசாலைகளுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன 

இந்நிகழ்வில் கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களுடன் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர், தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம் ஐ எம் எஸ் இர்சாத், தாய் சேய் நலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எச.ரிஸ்பின், கணக்காளர் உசைனா பாரிஸ், மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.ஐ ஜவாத், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ரஸ்ஸாலிம் உள்ளிட்ட குழுவினர் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Photo Albums

1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5
4 / 5
5 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe