கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழையினால் சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள உடங்கா - 02 பல்கலைக்கழக பின் வீதியில் நீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் இதனால் குறித்த வீதிகளினூடாக போக்குவரத்து செய்வதில் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனை கவனத்தில் கொண்டு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் பணிப்புரைக்கமைய துரிதகதியில் செயற்பட்டு வெள்ளநீர் வழிந்தோடக்கூடிய வகையில் பெக்கோ இயந்திரம் மூலம் வீதிக்கு குறூக்காக அகழி வெட்டப்பட்டு குழாய்கள் போடப்பட்டு சீர்செய்யப்பட்டது.