Ads Area

வௌிநாடு செல்பவர்களுக்கான அறிவிப்பு.

 ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி முறையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பெயர், வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை தயாரித்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை தடுக்கும் வகையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (28) கைச்சாத்திடப்பட்டது. வெளிநாடுகளுக்குச் செல்லும் நபர்கள் தமது உண்மைத் தகவல்களை மாற்றி போலியான பிறப்புச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளைத் தயாரித்து பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.


வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe