Ads Area

சம்மாந்துறையில் சுனாமி ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்த இடம் சிரமதானம் செய்யப்பட வேண்டும்.

 நூருல் ஹுதா உமர்


கடந்த சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு மரணித்த அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்துள்ள சம்மாந்துறை மஹலா மஹலா  மையவாடி என அழைக்கப்படும் மையவாடி அமைந்துள்ள இடம் புற்கள் வளர்ந்து பற்றைக்காடாக மாறியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த 26ம் திகதி சுனாமி தாக்கத்தின் 18 வது ஆண்டு நிறைவை அனுஷ்டித்த மக்கள் குறித்த மையவாடிக்கு சென்று அங்கு நல்லடக்கம் செய்துள்ள உறவினர்களுக்காக துஆ பிராத்தனையில் ஈடுபட்டனர். சுனாமி அலையில் அள்ளுண்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கலம் கொடுத்த சம்மாந்துறை மக்கள், மரணித்த சகோதரர்களின் உடல்களையும் சம்மாந்துறையின் பல மையவாடிகளில் நல்லடக்கம் செய்ய வாய்ப்பளித்தனர். மரணித்த சகோதர்களை கௌரவிக்கும் விதமாக அந்த பிரதேசத்தை வேலியமைத்து குறித்த பள்ளிவாசல் நிர்வாகமும், சம்மாந்துறை மக்களும் பாதுகாத்து வருகின்றனர். இருந்தாலும் இந்த மையவாடியில் இன்றைய நிலை கவலையளிக்கும் நிலையாக மாறியிருக்கிறது.

குறித்த மையவாடியை சிரமதானம் செய்து அந்த மையவாடிக்கான பெயர்பலகையை பொறுத்த அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புக்கள், அரசியல் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றங்கள் முன்வரவேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

Photo Albums

1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe