Ads Area

அக்கரைப்பற்றில் மரங்கள் சரிந்தது : துரிதமாக களமிறங்கியது அக்கரைப்பற்று பிரதேச சபை.

 நூருல் ஹுதா உமர்


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையின் காரணமாக பலத்த காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாத இரண்டு தேக்கு மரங்கள் அக்கரைப்பற்று இசங்கணிச்சீமையில் நேற்றிரவு பிரதான வீதியை குறுக்கறுத்து முறிந்து விழுந்ததினால் போக்குவரத்து தடைப்பட்டு மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்களும், பாதசாரிகளும் உச்சமான அசௌகரியத்தை சந்தித்தனர்.  விடயம் அறிந்து இசங்கணிச்சீமை வட்டாரத்திற்கு பொறுப்பான அக்கரைப்பற்று  பிரதேச சபை உறுப்பினர் டீ.எம். ஐயூப், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக்கை தொடர்பு கொண்டு விடயத்தை எத்திவைத்ததன் காரணமாக அவர்களின் அதிரடியான நடவடிக்கையின் மூலம் பிரதேச சபையினுடைய இயந்திரத்தைக் கொண்டும், பொதுமக்களின் உதவியை கொண்டும், இலங்கை மின்சார சபையினுடைய உதவி கொண்டும் மரங்கள் அகற்றப்பட்டு வீதி போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டதுடன் மின்சார இணைப்பும் உடனடியாக சீரமைத்து வழங்கப்பட்டது.

இதன் போது அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.பர்சாத், இசங்கணிச்சீமை ஜும்மா பள்ளிவாசல்   தலைவர் ஏ.எல்.இஸ்மாலெப்பை, பிரதேச இளைஞர்கள், பொதுமக்கள், பிரதேச சபை ஊழியர்கள் ஆகியோர்கள் துரிதமாக இயங்கி நிலையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe