Ads Area

சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் நினைவாக சாய்ந்தமருது ஹிஜ்ரா மஸ்ஜிதில் கத்தமுல் குர்ஆன் ஓதலும் விஷேட துஆ பிரார்த்தனையும்.

 நூருல் ஹுதா உமர்


நாட்டில் கடந்த 2004 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி, ஏற்பட்ட இயற்கை ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் 18வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள், சாய்ந்தமருது  வொலிவேரியன் ஹிஜ்ரா மஸ்ஜிதில் (26) இன்று இடம்பெற்றது.

அந்த வகையில் சுனாமியால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேற்றப்பட்டுள்ள சாய்ந்தமருது  வொலிவேரியன் கிராமத்தின் ஹிஜ்ரா மஸ்ஜிதில் கத்தமுல் குர்ஆன் தமாம் நிகழ்வும்  விஷேட துஆ பிராத்தனையும் பள்ளிவாசலின் தலைவர் அல்-ஹாஜ்  ஏ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஹிஜ்ரா மஸ்ஜிதின் ஆரம்பகால தலைவரும் சாய்ந்தமருதின் முன்னாள் பிரதேச செயலாளரும், சட்ட ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளரும் தற்போதைய பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும் பள்ளிவாசலின் சிரேஷ்ட ஆலோசகருமான  அல்- ஹாஜ் எ.எல்.எம்.சலீம் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

கத்தமுல் குர்ஆன் தமாம் மற்றும்  விஷேட துஆ பிராத்தனை நிகழ்வுக்கு சாய்ந்தமருது ஹத்தீப் முஹத்தீன் சம்மேளனத்தின் தலைவரும் சாய்ந்தமருது ஜும்மா  பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாமுமான  அல்-ஹாஜ் எம்.ஐ.எம். ஆதம்பாவா (ரஷாதி) அவர்கள் தலைமை வகித்தார்.

பள்ளிவாசலின் செயலாளர் கே.எம்.முகம்மட் சஹீது மற்றும் பொருளாளர் ஏ.எம்.அக்பர் ஆகியோரது வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் இமாம்கள், மதரஸா மாணவர்கள் பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை அனர்தத்தினால் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பகுதி அதிகமான உயிரிழப்புக்களையும் , சேதங்களை சந்தித்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe