மழைகாலங்களில் மக்களுக்கு துரித சேவையினை தடையின்றி வழங்கும் நோக்குடன் சம்மாந்துறை பிரதேச சபையில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மழை அங்கி (Rain Coat) வழங்கும் நிகழ்வு செயலாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதனை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எம்.எம்.எம்.முஸ்தபா, எம் வீ.எம்.ஜெஸீர் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.