அஸ்ஹர் இப்றாஹிம்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அழைப்பில் இலங்கைக்கு வருகை தந்திருக்கும் உலகப் புகழ் பெற்ற ஓவியர் திரு.மு.பத்மவாசன் அவர்களால் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் 2022 உயர்தர கலைப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றும் சித்திரக்கலையை ஒருபாடமாக கற்கும் மாணவர்களுக்கும், அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் " ஓவியங்கள் வரைதல் " என்னும் தொனிப்பொருளில் கடந்த புதன்கிழமை பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.மகேந்திரகுமார் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் அழகியல் பாடங்களுக்குரிய உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.க. சுந்தரலிங்கம் , சித்திரக்கலை பாடத்திற்குரிய ஆசிரிய ஆலோசகர் திரு.அ.ஜெயவரதராஜன் , சித்திரகலை பாட ஆசிரிய வளவாளர் திரு. பு. ஸ்ரீகாந் ஆகியோரும், பட்டிருப்பு ம.ம. வி (தே.பா) களுவாஞ்சிகுடி, களுதாவளை ம. வி(தே.பா ), குருக்கள்மடம் கலைவாணி ம.வி, தேற்றாத்தீவு ம.வி, ஓந்தாச்சிமடம் விநாயகர் ம .வி, கோட்டைக்கல்லாறு ம.வி, துறைநீலாவணை ம.வி, பெரியபோரதீவு பாரதி ம.வி, பழுகாமம் கண்டுமணி ம.வி, மண்டூர் 13 விக்னேஸ்வரா ம.வி, மண்டூர் 14 சக்தி ம.வி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் , ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
அம்பாரை மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கு.ஜெயராஜீ அவர்களால் திரு.மு. பத்மவாசன் தொடர்பான அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது.