அஸ்ஹர் இப்றாஹிம்
அம்பாறை நகரிலிருந்து பக்மிடியாவ செல்லும் வழியில் புதிதாக போடப்பட்ட கார்பெட் வீதியில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தக்கூடிய அனர்த்தம் ஏற்படக்கூடிய வகையில் பாலங்கள் அமைந்துள்ளன. கார்பட் வீதி அமைக்கப்படும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தைச் பற்றி கவனத்திற் கொள்ளாமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இந்த பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய நிலையில் காணப்படுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.