Ads Area

இந்தியப் பேராசிரியர் ஜவாஹிருல்லா எழுதிய "நபிகளாரின் சமூக உறவு" நூல் கொழும்பில் வெளியீடு.

 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)


தமிழ்நாடு சட்டசபை உறுப்பினரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா எழுதியுள்ள "நபிகளாரின் சமூக உறவு" எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு கொழும்பு தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம் பெறும் இவ்விழாவில்,  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

அத்தோடு, சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாத் பதியுதீன், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் அகில இந்திய யூனியன் ஒப் முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் சிறப்பு பேச்சாளராகவும் கலந்து கொள்வார் என முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் தெரிவித்தார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe