Ads Area

நாளை நிந்தவூரில் உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் கலந்து கொள்ளும் இளைய தலைமுறையினருக்கான வழிகாட்டல் மாநாடு - நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைவருக்கும் திறந்த அழைப்பு விடுப்பு

 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)


இளைய தலைமுறையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் வழிகாட்டல் மாநாடு நாளை (03) சனிக்கிழமை காலை 8:30 தொடக்கம் நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய  பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூரின் பங்களிப்புடன் இடம்பெறும் இவ்விழாவில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி என். புள்ளை நாயகம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

அஸ்ஸெய்யத் றஸ்மி மௌலானாவின்ஒருங்கமைப்பில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹதுல் நஜீமின் தலைமையில் இடம்பெறுகின்ற இந்நிகழ்வில், தமிழ்கூறு நல்லுலகில் அன்புக்குரிய ஒலிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் பிரதம அதிதியாகவும் பிரதம பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.

அதிதிகளுடன் கலந்து சிறப்பிக்கும் இளைய தலைமுறையினருக்கான இந்த மாபெரும் மாநாடுக்கு விரும்பியவர்கள் எவரும் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டுக் குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிகழ்வின் நேரடி ஒலிபரப்பு நாளை காலை 10 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை எம்.எம். அலைவரிசையில் ஒலிபரப்பாகும்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe