Ads Area

பெண் தலைமைகளுக்கான டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட செயலமர்வு..!

 (எம்.என்.எம்.அப்ராஸ்)


சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான  மக்கள் இயக்கத்தின்(கபே)தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் முன்னெடுக்கெப்படும் 'ஜனனி' டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட நிகழ்வுகளில் ஒரு நிகழ்வு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ் இணைப்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின்(கபே) தேசிய நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீனின் தலைமையில் கல்முனை ஹிமாயா பீச் ரிசோட்டில் இன்று(20)இடம்பெற்றது.

இதில் வளவாலராக ஜனநாயக மறு சீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கை நெறிக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கலந்து கொண்டு பெண் தலைமைகள் மேடைப்பேச்சுக்களையும்,ஊடக அறிக்கையிடல்களையும் எவ்வாறு மேற்கொள்ளுதல் என்பது தொடர்பாகவும்,தேர்தல் பிரச்சார நிதி சட்டம், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தும் விதம் மற்றும் தகவல் அறியும் சட்டம் தொடர்பாக விளக்கமளித்தார்.

நிகழ்வின் இறுதியில் இதில் கலந்து கொண்ட பெண் தலைமைகளினால் ஊடகங்களுக்கு அறிக்கையிடும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Photo Albums

1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe