Ads Area

உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் கலைக்கப்படும்..!

 இலங்கையில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.


நாவலப்பிட்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது மஹிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலத்தினுள் கலைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.


உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட பின்னர் 14 நாட்களுக்குள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில், தேர்தல் தேதி ஜனவரி 5 ஆம் தேதிக்கு முன்னதாக அறிவிப்போம் என தேர்தல் ஆணையக்குழு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe