திருமணத்திற்கு அப்பால் உடலுறவில் ஈடுபட்டால் ஓர் ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் புதிய குற்றவியல் சட்டம் ஒன்று இந்தோனேசிய பாராளுமன்றத்தில் இந்த மாதத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் ஆரம்பத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்படக் கூடும் இன்று இந்த வரைவை தயாரிப்பதில் தொடர்புபட்ட அரசியல்வாதியான பம்பங் வுர்யன்டோ தெரிவித்துள்ளார். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தோனேசிய பிரஜைகள் மற்றும் வெளிநாட்டினருக்கு அமுல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.
நிர்வாகத்திற்கு புகார் அளிக்கும் தரப்பு ஒன்று இருந்தால் மாத்திரமே இந்த சட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. திருமணமானவர்கள் இந்தச் சட்டத்தை மீறினால் அவரது கணவன் அல்லது மனைவிக்கு புகார் அளிக்கும் உரிமை வழங்கப்படுகிறது.
அதேபோன்று, திருமணமாகதவர்கள் உடலுறவு வைத்துக்கொண்டால் அது குறித்து புகாரளிக்கும் உரிமையை அவர்களின் பெற்றோருக்கு இந்தச் சட்டம் வழங்குகிறது. மேலும், திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழ்வதும் தடைசெய்யப்படவுள்ளது. மீறுபவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.
thanks-thinakaran