Ads Area

அரச பணியாளர்கள் கட்டாய ஓய்வு.!அதிவிசேட வர்த்தமானி வெளியீடு.

 அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை 60 வயதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


பொது நிர்வாக அமைச்சராக பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.mஇந்த தீர்மானம் எதிர்வரும் 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி, 55 வயது பூர்த்தியாகின்ற போது அல்லது அதன்பின்னர் அரசாங்கத்தின் எந்தவொரு ஊழியரையும், ஓய்வுபெறுவதற்கு பணிக்க முடியும்.


தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரினால் சேவையில் வைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டால் அன்றி, அரசியலமைப்பின் மூலம் அல்லது ஏதேனும் சட்டத்தின்மூலம் கட்டாயம் ஓய்வுபெறும் வயது குறிப்பட்டுள்ள ஊழியர்கள் தவிர ஏனைய அனைத்து அரசாங்க பணியாளர்களும் 60 வயது பூர்த்தியடையும்போது, கட்டாயம் சேவையிலிருந்து ஓய்வுபெற வேண்டும் என அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

thanks-hirunews



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe