Ads Area

22 வயது யுவதியை வீடு புகுந்து துாக்கி ஆட்டோவில் கடத்திச் செல்லும் காட்சிகள்!

 வீட்டுக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் வீட்டிலிருந்தவர்களை தாக்கி 22 வயதான பெண்ணை ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,


உதயநகர் பகுதியில் வாசிக்கும் குறித்த பெண் இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் காதலன் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிந்த நிலையில் அவரை திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த குறித்த காதலன் போதை தலைக்கேறிய நிலையில் வன்முறை கும்பலுடன் யுவதியின் வீட்டுக்குள் புகுந்து தாய் மற்றும் தம்பியை தாக்கிவிட்டு யுவதியை ஆட்டோவால் இழுத்துச் சென்றுள்ளார்.


சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ள நிலையில் நாளை காலை பார்க்கலாம் என பொலிசார் கூறியதாக தகவல் கிடைத்தது.

thanks-vampan



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe