Ads Area

உரிய மட்டத்தில் பேசி பிரச்சினைக்கு தீர்வு கண்ட ஹரிஸ் எம்.பி : பிரதேச செயலாளர் லியாக்கத் அலி விளக்கம் !

 


நூருள் ஹுதா உமர்



கல்முனை பிறப்பு பதிவு சம்மந்தமாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவலக அமைச்சினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இது விடயமாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் இன்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு நேரடியாக சென்று அமைச்சின் மேலதிக செயலாளரும், பதிவாளர் நாயகமுமான பி.எஸ்.பிரபாத் அபேயவர்த்தனவுடன் இது விடயமாக நேரடியாக தெளிவுபடுத்தினார். இச்சந்திப்பின் போது கடந்த 30 வருட காலமாக கல்முனை நகர் பிரதேசத்தில் இடம் பெறும் புதிதாக பிறந்தவர்களின் பதிவு விடயம் சம்மந்தமாகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் உதவி செயலாளரின் (விசாரணைப் பிரிவு) 15.12.2022ம் திகதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு என இரு பிரதேச செயலகங்கள் இயங்கவில்லை என்றும் கல்முனையில் ஒரு பிரதேச செயலகமே இயங்குவதாகவும் விளக்கினார்.  மேலும் கடிதத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினரின் விளக்கங்கங்களை கேட்டறிந்த அமைச்சின் மேலதிக செயலாளர் இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெறமாட்டாது என பாராளுமன்ற உறுப்பினருக்கு உறுதியளித்துள்ளார். 

இது விடயமாக அமைச்சின் மேலதிக செயலாளர் கல்முனை பிரதேச செயலளர் ஜே.லியாகத் அலியுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்று இருந்தார். இது விடயமாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியினை தொடர்பு கொண்டு மேற்படி விடயம் சம்மந்தமாக கேட்டறிந்த  போது,  இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ் தன்னை தொடர்பு கொண்டு அமைச்சின் மேலதிக செயலாளருடன் தொலைபேசி தொடர்பாடலினை ஏற்படுத்தியதோடு தான் இது விடயமக கடந்த காலங்களின் நடைமுறையில் உள்ள பிறப்பு சான்றிதழ்  விடயங்களை தெளிவுபடுத்தினேன். என்பதோடு பிரதேச செயலாளர் என்ற ரீதியில்  இந்த விட சம்மந்தமாகவும் இதில் உள்ள தவறுகளை அமைச்சு மட்டத்தில் உடனடியாக கொண்டு திருத்தியதோடு இது விடயமாக உரிய நடவடிக்கைகள் எடுத்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களுக்கு தனது நன்றிகளையும் தெரிவிப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe