Ads Area

மக்களின் குரலுக்கு செவிசாய்த்து உடனடியாக களமிறங்கிய அக்கரைப்பற்று தவிசாளர் றாஸிக் !

 நூருல் ஹுதா உமர்


அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பள்ளி குடியிருப்பு இரண்டாம் வட்டார ரஸீனா உம்மா வீதி மக்கள் பாவனைக்கு பயன்படுத்த முடியாதளவிற்கு குப்பைகள், விலங்கு கழிவுகள், திண்மக்கழிவுகளினால் நிரப்பட்டு துர்நாற்றம் கொண்டதாக காணப்பட்டதுடன் கட்டாக்காலிகளின் தொல்லைகளும் அதிகரித்து காணப்பட்டு குண்டும் குழியுமாக மக்களின் போக்குவரத்திற்கு பாரியளவிலான இடைஞ்சலாக காணப்பட்டது.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் அவர்களுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டு மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடப்பட்டது. கிராமத்தினுடைய எல்லை வீதியாக காணப்பட்ட ரஸீனா உம்மா வீதி குப்பைகள் நிறைந்து அசௌகரியமாகக் காணப்படுவதாகக் கிடைத்த பொது மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பிரதேச சபையினுடைய ஆளணியை கொண்டு வீதியினை பரிபூரணமாக சுத்தம் செய்யப்பட்டு மீள் பாவனைக்கு விடப்பட்டது. மாத்திரமல்லாமல் வீதிகளை பராமரிக்கின்ற பொறுப்புகள் பற்றியும் குப்பைகளை வீதிகளில் கொட்டாமல் சேகரிக்கின்ற முறை பற்றியும் பொது மக்களுக்கு ஜின்னா பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் அறிவுரையும் வழங்கி வைக்கப்பட்டதாக தவிசாளர் எம்.ஏ. றாஸிக் தெரிவித்தார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe