( எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம். ஐ.அப்துல் ரஸாக் அவர்களின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்
போதைவஸ்து தடுப்பு குழுவிற்கான விசேட விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டம் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சின் பக்கீர், பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் ஆகியோரின் பங்குபற்றுதலுடன்பாடசாலையின் அதிபர் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில் பிரதானமாக பாடசாலை மாணவர்கள் மத்தியிலும்,பாடசாலைச் சூழலிலும் சமூகத்திலும் காணப்படக் கூடிய போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் அவற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இவ் விழிப்புணர்வு நிகழ்வில் பாடசாலை போதைப்பொருள் தடுப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் பாடசாலையின் அதிபர்,பிரதி அதிபர்,ஒழுக்காற்று குழு ஆசிரியர்கள், வழிகாட்டல் ஆலோசனைப் பிரிவு ஆசிரியர்,சிரேஸ்ட ஆசிரியர்கள்,சிற்றுண்டிசாலை நடத்துனர் மற்றும் சிரேஸ்ட மாணவ தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.