அஸ்ஹர் இப்றாஹிம்
கிழக்குமாகாண பாடசாலைகளுக்கிடையிலான எறிபந்து போட்டி கடந்த சனிக்கிழமை  (31) ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
  13 வயதின் கீழ் எறிபந்து விளையாட்டு நிகழ்ச்சியில் ஆண், பெண் பிரிவு இரண்டிலும் ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயம்  2 ஆம் இடத்தினைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
 பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தலைமையில் வழிநடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

