Ads Area

சிவில் அமைப்புக்களின் பிரதானிகளும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட "இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம் சமூகத்தின் வகிபாகம்" தொடர்பிலான கலந்துரையாடல் !

 (நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்)


சமூக நடவடிக்கைகள், துறைசார் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக்கான மையம் ஏற்பாடு செய்த "இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம் சமூகத்தின் வகிபாகம்" தொடர்பிலான கலந்துரையாடல் ஆராய்ச்சிக்கான மையத்தின் தலைவர் அதிபர் எம்.ஜே.எம் அன்வர் நௌசாத் தலைமையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

YMMA இந் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் அதிபர் எம்.ஐ.எம். றியாஸின் ஆரம்ப உரையுடன் ஆரம்பித்த இந்த கலந்துரையாடலில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் அரசியல் விஞ்ஞான துறைத்தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ. சதாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் இனமுரண்பாடுகளில் முஸ்லிம் தலைவர்கள் நடந்து கொண்ட விதங்கள், கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் தவறவிட்ட தீர்வுகள், முஸ்லிம் அரசியலின் போக்குகள், அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளில் சமூகம் அடைந்த இலாப நட்டங்கள், இன ஒற்றுமை, சமஷ்டி, அரசியல் தீர்வில் முஸ்லிங்கள் எதிர்பார்ப்பது போன்ற பல விடயங்களை தனது கருத்துரைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், கிழக்கின் கேடயம் பிரதானியும், அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளரும், என்.டி.பி.எச்.ஆர். இந்த தேசிய கொள்கைப்பரப்பு செயலாளருமான யூ.எல்.என். ஹுதா, நாம் ஊடகர் பேரவையின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல். மப்ரூக் ஆகியோர் விளக்கினர்.

இந்த கலந்துரையாடலில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் சட்டமானி எஸ்.எம்.எம். ஹனீபா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.சி.புஹாரி, அட்டாளைச்சேனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ். ஜுனைதீன், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் யு.எம்.வாஹீட், அரச சார்பற்ற நிறுவனங்களின் தவிசாளர் எஸ்.எம். லாபீர்,  என்.டி.பி.எச்.ஆர். இந் உச்சபீட உறுப்பினர் எம்.என்.எம். அப்ராஸ், அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர் எம்.எம். ருக்ஸான், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், பாடசாலை அதிபர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், ஊடக அமைப்புகளின் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe