இந்த வருடம் விவசாயிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 56,000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு தங்களது உற்பத்திச் செலவை குறைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, இந்தத் தொகை வழங்கப்படுகிறது.
தற்போது உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால் அறுவடை முடிந்து, போதிய இலாபம் கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
அதன்படி குறித்த நிதியைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
thanks-hiru