இலங்கையில் கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்காக 85,072 பேர் விண்ணப்பித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. தென் கொரியாவின் உற்பத்தி மற்றும் கடற்றொழில் துறைகளுக்காக இந்த கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சை நடத்தப்படுகிறது.
இதேவேளை, இம்முறை கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களுக்கான அனுமதி அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் துறையில் காணப்படும் வேலைவாய்ப்புகளுக்கான கொரிய மொழி பரீட்சை மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், கடற்றொழில் துறை வேலைவாய்ப்பிற்கான பரீட்சை செப்டம்பர் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.