Nihal Umarukatha
சம்மாந்துறை வலய அதிபர் கூட்டம் இன்று வலயக் கல்விப் பணிப்பாளர் Dr.MMMS.உமர்மௌலானா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
2023 ஆம் கல்வி ஆண்டுக்கான திட்டமிடல் பற்றியும் பாட, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தேசிய மட்டத்தில் அடைவுகளை அதிகரிக்க அதிபர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பாடசாலைகளுக்கு தினசரி தரிசிப்புகளை மேற்கொண்டு மேற்பார்வை செய்யவுள்ளதாகவும் கூறி, இவ்வலயத்தில் 4 வருடகாலமாக திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளராக சிறப்பான முறையில் கடமையாற்றிய Mr.S.M.ஹைதரலி அவர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் அதிபர் சங்கத் தலைவர்A.M.முத்தலிப் அவர்களினாலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு அல்-மர்ஜான் தேசிய பாடசாலை அதிபர் M.M.மீராமுகையதீன் அவர்களினால் அதிபர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான M.Y.அரபாத்(நிர்வாகம்), A.M.மஜீட்(கல்வி அபிவிருத்தி), Mrs.V.நிதர்சனி(கல்வி முகாமைத்துவம்) மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான U.L.றியால்,A.நசீ ர் மற்றும் Mr.பரமதயாளன் அவர்களும், கோட்டக் கல்வி பணிப்பாளர்U.L.மஹ்மூதுலெவ்வை அவர்களும் அதிபர்களும் கலந்து கொண்டனர்.