சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய உறுப்பினர்களாக அப்துல் ஹமீட் காலித் மற்றும் எஸ். ராஜேஸ்வரி ஆகியோர் இன்று (21) புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் திரு. ஐ.எல்.எம் மாஹிர் அவர்களின் முன்னிலையில் தவிசாளர் அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் முக்கிய உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அப்துல் ஹமீட் முஹமட் காலித் அவர்கள் கடந்த சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக பட்டியல் வேட்பாளராகவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சென்ற வருடம் சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்டு உறுப்பினராக பதவி வகித்து வந்த வை.வீ.முஹம்மட் முஸம்மில் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்ட அப்துல் ஹமீட் அன்வர் (றமீஸ்) அவர்கள் அப்துல் ஹமீட் முஹமட் காலித் அவர்களின் உடன் பிறந்த சகோதரராவார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.