Ads Area

அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் பாரிய கஞ்சாத்தோட்டம் கைப்பற்றல்.

  


பாறுக் ஷிஹான், எஸ்.எம்.எம்.முர்ஷித்


அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டு வந்த நிலையில், அண்மையில் (03/02/2023) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.


அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு (3 V MIC) கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடாத்திய தேடுதலில் பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.


இதன் போது சுமார் 7,500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தது.


கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்புத் தரப்பினரால் அழிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை தமன பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe