தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவைத் தாக்கிய கடந்த மாதத்தின் பாரிய பூகம்பத்திற்குப் பிறகு, துருக்கிக்கு உதவும் விதமாக இந்த நடவடிக்கையை சவுதி அரேபியா முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியா இராச்சியத்திற்கும் துருக்கி குடியரசுக்கும் அதன் சகோதர மக்களுக்கும் இடையில் இருக்கும் நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் வரலாற்று உறவுகளுக்கு ஒரு சான்று இதுவென தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கிய மத்திய வங்கியில் 5 பில்லியன் டொலர்களை வைப்பிலிட்டுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது
பணம் எவ்வாறு பயன்படுத்தப்படும் அல்லது அந்த தொகையை திருப்பித் தருமாறு இராச்சியம் தெரிவிக்க முடியுமா என்பது குறித்த விவரங்களை இன்னும் வெளிப்படுத்தவில்லை.
இருப்பினும், இத்தகைய வைப்புத்தொகை சர்வதேச அளவில் மற்ற நாணயங்களுக்கு எதிராக ஒரு நாட்டின் நாணயத்திற்கான மாற்று விகிதங்களை உறுதிப்படுத்த உதவும் என தெரிவிக்கப்படுகின்றது.
thanks-iftamil