( அஸ்ஹர் இப்ராஹிம் )
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ரிதிதென்ன இக்ரஃ வித்தியாலயத்தின் 10வது இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தலைமையில் இடம்பெற்ற 10வது இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளார் எஸ்.எம்.எம்.அமீர் கலந்து சிறப்பித்தார்.
கெளரவ அதிதிகளாக பிரதிக் கல்விப்பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், உதவிக் கல்விப்பணிப்பாளர்களான எம்.எல்.எம் .முதரிஸ், எம்.ஐ.அஹ்சாப், ஏ.எம்..ஜாபீர் கரீம், ஆசிரிய ஆலோசகர்களான எம்..சித்தீக், எச்.எம்..கடாபி எச்.எல்.எம்..இனாமுல்லாஹ், வாகரைப்பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம்..தாஹிர், எச்.எம்..றஹீம் முஹம்மட், றிஸ்வி (கால்நடை அபிவிருத்திச்சங்க தலைவர்), எஸ்.சபூர்த்தீன் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இல்ல விளையாட்டுப்போட்டியின் சபா இல்லம் 941 புள்ளிகளைப் பெற்று இவ்வருட சாம்பியனாகவும்.ஹிரா இல்லம் 832 புள்ளிகளைப்பெற்று இரண்டாமிடத்தினைப் பெற்றுக்கொண்டது.
இறுதியில் அதிதிகளால் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.