எதிர்வரும் காலங்களில் எரிபொருளுக்கான QR குறியீடு வாராந்தம் செவ்வாய் கிழமைகளில் மீள் நிரப்பப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் அனைத்து எரிபொருள் ஒதுக்கீட்டு (QR)அனுமதி அட்டைகளும் நேற்று மீள் நிரப்பப்பட்டுள்ளன.
இந்தநிலையில், இன்று (8) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் வாராந்தம் செவ்வாய் கிழமைகளில் எரிபொருள் ஒதுக்கீடு மீள் நிரப்பப்படவுள்ளது.முன்னதாக திங்கட்கிழமைகளில் QR குறியீடு மீள் நிரப்பப்பட்டுவந்தது.
இதனால் வார இறுதி நாட்களிலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் செயல்பட ஏற்பட்டதன் காரணமாக விநியோகச் செலவைக் குறைக்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் எரிபொருள் ஒதுக்கத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
thanks-hiru