சென்னல் கிராமம் அறபா பள்ளிவாசல் பிரதேசத்தில் கல்குவாரியினால் உருவான ஆழமான குட்டை தொடர்பான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
இதில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் கே.எம்.கே.றம்சின் காரியப்பர், சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எல்.தாசீம், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல்.றாசீக், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீட், பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் கே.எம்.கே.நிமாட், கிராமசேவை உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.ஒஜிஸ்கான், நம்பிக்கையாளர் சபை செயலாளர் எம்.ஐ.எம்.இஸ்ஹாக், மஜ்லிஸ் அஸ்ஸுரா செயலாளர் எம்.முஸ்தபா லெவ்வை, தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.