திருகோணமலை எண்ணெய் தாங்கி அமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான அவசர வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொறுப்பு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
திருகோணமலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இலங்கை ஐஓசி நிறுவனமும் இணைந்து நடத்தும் 61 எண்ணெய் தாங்கிகளைக் கொண்ட எண்ணெய் தாங்கி வளாகத்தைப் பார்வையிட நேற்று (03) பிற்பகல் வந்தபோதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை வழங்கியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது குண்டுத் தாக்குதலுக்குள்ளான எண்ணெய் தாங்கி வளாகத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
thanks-thinakkural