சம்மாந்துறை ஏ.எம். றிகாஷ்
சம்மாந்துறை சென்னல் கிராமம் பகுதியில் இன்று (20) , இரு யானைகள் உழ்நுழைந்து அட்டகாசத்துடன் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக சம்மாந்துறை உம்ரா பள்ளிவாசல் தலைவர் எம்.என்.எம் சுஹாட் கருத்து தெரிவிக்கையில் இன்று இரவு 2.45 மணியளவில் உள் நுழைந்த இரு யானைகள் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மக்களால் யானைகளை விரட்ட முடியாத அளவுக்கு நிலைமை காணப்பட்டதாகவும், குறித்த பகுதியில் உள்ள சபீனா-காலைக்குள் உள்நுழைந்த யானைகள் அங்கு இருந்த ஆட்டோ முட்சக்கர வண்டியொன்றை உடைத்து துவம்சம் செய்து, அதன் அருகில் உள்ள பாயிஸின் நெற் களஞ்சிய சாலைக்குள் உள் நுழைந்து வாழை மரங்கள் , மதில் போன்றவற்றை உடைத்துள்ளது.
பின்னர் வயதான பாட்டி ஒருவரின் வாழ்வாதாரத்திற்காக பயிரடப்பட்டிருந்த மரவள்ளி கிழங்கு பயிர்ச்செய்கையை முற்றாக நாசம் செய்துள்ளது.
இன்னுமோர் யானை மதீனா பள்ளிவாசல் வீதி அருகில் உள்ள உரிமையாளர் ஜலீல் என்பவரின் கடைக்குள் நுழைந்து கடைக்குள் இருந்த வாழைப்பழ குலைகள் , கடையில் இருந்த பொருட்களை உடைத்து நாசம் செய்துள்ளது.
நள்ளிரவில் கடந்த ஒரு மணித்தியாலங்களாக யானைகளின் அட்டகாசம் தொடரந்தும் ஊர் மக்களால் எதுவும் செய்து கொள்ள முடியாத நிலையில் இருந்ததாகவும் கூறினார்!
கடந்த 3மாதங்களுக்கு மேல் தொடரும் யானைகள் அட்டகாசம் இன்னும் குறைந்ததாக இல்லை! இந்த போகத்தில் மாத்திரம் யானையால் தாக்குதலுக்கு உள்ளாகி 4 விவசாயிகளின் உயிர்கள் பலியாகியுள்ளது.
யானைகள் ஊருக்குள் நுழைந்து நாசம் விளைவிக்கும் அளவிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் இன்னும் பொடுபோக்காகவே இருந்து வருவது கவலையளிக்கிறது!